ஒவ்வொரு முறை நியாய விலை கடைக்கு செல்லும் போதெல்லாம் - ஒரு காட்சியை தவறாமல் காண நேரிடும். அது -இலவச அரிசியை "வேண்டாம்" என சொல்லும் பொதுமக்கள். "வாங்க சொல்லும்" கடைக்காரர். அரிசி வாங்காமலே வாங்கியதாக அட்டையில் பதிய பொது மக்கள் சொன்னாலும், "அரிசி வாங்கினால் தான் அட்டையில் பதிவோம்" என்று கடைக்காரர் சொல்வதாலும், எங்கே இலவச அரிசி வாங்காமல் போனால் - அரசு தரப்போகும் இலவச மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் போன்றவை கிடைக்காமல் போகுமோ என்கிற அச்சத்தில் - பொதுமக்கள் வேண்டா வெறுப்பாக இருபது கிலோ அரிசியை வாங்கி செல்வார்கள்.விருப்பமின்றி வாங்கி செல்லப்படும் அரிசியின் கதி என்னவாகும். எத்தனை பேர் உபயோகப்படுத்துகிறார்கள். சிலர் -நியாய விலை அட்டை இல்லாத மிக மிக வரியவர்களுக்கு தருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் வாங்க விரும்புவதில்லை. "இலவசமாக வாங்கிய அரசியை, வேறு யாருக்கும் இலவசமாக கொடுத்தாலும் வாங்குவதில்லை" வாங்கி வாங்கி வீட்டில் சேர்த்து வைக்கப்படும் அரிசியை என்ன செய்வார்கள்.
அவ்வப்போது செய்திதாள்களில் இந்த செய்திகளை காணலாம். "குப்பையில் கொட்டப்பட்டிருந்த இலவச அரிசி" என்று. இந்தியாவில் ஒரு பெரும் பகுதியினர் உணவின்றி இருக்கையில் - தமிழகத்தில் இலவசம் என்கிற பெயரில் எவ்வளவு அரிசி வீணடிக்கப்படுகிறது. அதற்காக அரசு எவ்வளவு பணத்தை விரயம் செய்கிறது. தமிழகத்தை விட பின்தங்கியுள்ள மாநிலத்தில் கூட இலவச அரிசி வழங்கப்படவில்லை.
"இலவச அரிசி வழங்கப்படுவதை சரி என்றோ அல்லது தவறு" என்றோ வாதாட விரும்பவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக - பெருமளவு பணத்தை அரசு விரயம் செய்கிறது. நியாயவிலை கடையில் அரிசி வாங்குகிற எல்லோரும் அதை பயன்படுத்தினால் - தமிழகத்தில் பாதிக்கும் அதிகமான அரிசி கடைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததா. "இருபது கிலோ அரிசி - ஒரு சிறிய குடும்பத்திற்கு சாப்பாட்டிற்கு போதுமானதே".சென்ற ஆட்சி காலத்தில் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டமையால் - தமிழகத்தில் பெருமளவு தொலைக்காட்சி விற்பனை சரிந்ததாக" எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் நண்பர் சொன்னார். அப்படி ஏதேனும் அரிசி வியாபாரத்தில் நடந்ததா? அரிசி கடையிலும், உயர் ரக அரிசியும் அமோகமாக விற்பனை ஆகிறதே. நிச்சயம் தமிழகம் - பல தவறான விஷயங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அதில் இலவசமும் ஒன்று.
"பரம ஏழைகளுக்கு மட்டும் இலவச அரிசி" என்றார் கலைஞர் தமது தேர்தல் அறிக்கையில். அதை தற்போதைய அரசு செய்யலாம். வருஷத்திற்கு பல நூறு கோடி பணம் விரயமாவது தடுக்கப்படும்.
சிவகாசி நகரில் தெருவில் கொட்டப்பட்டு கிடந்த காட்சியும், அது குறித்த ஒரு செய்தியும். "விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு வசதியானவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள இரண்டாவது தெருவில், அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை , குப்பையில் கொட்டி உள்ளனர். 50 கிலோ கொண்ட அரிசி குப்பையிலும் ,இதன் அருகிலே 20 கிலோ கொண்ட ரேஷன் அரிசி வேறு , துணி பையில் தனியாக கிடந்தது. அரசானது,
உணவை கூட கடவுளாக வழிபடும் தேசத்தில் தான் - அரிசி குப்பையில் கிடக்கிறது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கி வருகிறது. இத் திட்டத்தில் பயன்பெற ,ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்களை வாங்கினால்தான், விலையில்லா பொருட்கள் கிடைக்கும் என ,பொதுமக்களிடம் தவறான கருத்து நிலவுகிறது. இதற்கு ஆசைப்படும் வசதி படைத்தவர்களும், ரேஷன் அரிசியை பெற்று இருப்பு வைக்கின்றனர்.
இது போன்ற அரிசி நாளடைவில் வீணாகி , பயன்படுத்தாத நிலையில், குப்பைகளில் கொட்டுகின்றனர். இலவச அரிசி யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து, அது போன்ற கார்டுகளுக்கு மட்டுமே வழங்கிட, அரசு நடவடிக்கை எடுத்தால், இது போன்ற நிலையை தவிர்க்கலாம்" நாம் சொல்வதையே பத்திரிகைகளும் சொல்லுகின்றன. சமூக ஆர்வலர்களும் சொல்கிறார்கள்.
பொருட்களை விரயம் செய்வது - அதை உற்பத்தி செய்தவனை எள்ளி நகையாடுவதற்கு சமானம். கல்யாண வீடுகளில் வீணாகும் பொருட்களை கண்டிப்பது போலவே, இத்தகைய செயல்களையும் கண்டிக்க வேண்டும். இறுதியாக ஒரு தகவல். தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் ரங்கநாதன் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியது,
.jpg)
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் !
ReplyDelete